சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பதவி ஏற்றதும், ரவுடிகளுக்கு புரியும் மொழில் பதில் சொல்வேன் என கூறிய நிலையில், அடுத்தடுத்து 3 என்கவுங்ணடர்களும் நடைபெற்றது.
இந்த நிலையில், ரவுடிகளுக்கு புரியும் மொழில் பதில் சொல்வேன் என்பது குறித்து விளக்கம் அளிக்க, வரும் 14ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5ந்தி பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் திமுக அரசின் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் காவல் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 7-ம் தேதி, சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றபோது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்களிடம் பேசுவேன் என பேட்டியளித்தார். அதன் அடிப்படையில் தலைமறைவாக உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சில ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யட்டும் உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் இளங்கோவன் சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் உள்ள ரவுடி ஒருவர் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினரிடம் இனி எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது எனவும், மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கை, கால்கள் உடைக்கப்படும் எனவும் எச்சரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதவி ஆணையர் இளங்கோவன் இவ்வாறு பேசியதை அப்பகுதியில் உள்ள நபர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
காவல்துறையினர் மிரட்டிய வீடியோ வைரலான நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், காவல் உதவி ஆணையர் இளங்கோவன் மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது ரவுடிகளை குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாக பேசியது எனவும், வேறு ஏதும் நோக்கமில்லை எனவும் அவர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து, எரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்களிடம் பேசுவேன் என பேட்டியளித்து தொடர்பாக, நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருணுக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அந்த சம்மனில் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையம்.
ஆக்கப்பூர்வமான திறமைகளை உள்ளடக்கிய அறிவார்ந்த மனிதன் சமூகத்தில் உள்ள ஒரு பகுதி மக்களிடையே வெளிப்படுத்தும் பாரபட்சமான பாகுபாடுகளை தகர்த்தெறிய வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே மனித உரிமைகள் ஆணையம். மனித உரிமை மீறல்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸ் நிலையம், நீதிமன்றம், இவற்றிற்கு முதன்மையாக மனித உரிமைகள் ஆணையம் திகழ்கிறது. அரசியல் மற்றும் தனி மனிதரின் ஈடுபாடு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும் இவ்வாணையமானது அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், அவர்கள் மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், அங்கீகாரமும் பெற்றுள்ளது. ஆனால், இந்த மனித உரிமை ஆணைய தலைவர்களாக நியமிக்கப்படுவதில் அரசியல் விளையாடி வருகிறது.
தற்போது, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் இருந்து வருகிறார். இவர் கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.மணிக்குமார் இருந்தவர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். இவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை பதவி வகிப்பார். இவருடன் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற ராஜா இளங்கோ மற்றும் வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோர் அங்கு நீதிபதிகளாக உள்ளனர். மனித உரிமைகள் ஆணையத்தை பொறுத்தவரை எஸ். மணிகுமார், கண்ணதாசன் மற்றும் ராஜா இளங்கோ ஆகியோரும் செயல்படுவர்.
இந்த அமைப்பே தற்போது காவல் ஆணையருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.