சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநில கல்லூரி மாணவன்  சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.  இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து  கல்லூரயில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, மாணவர்களின் எதிர்காலம் கருதி, கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது. இதனால், மாணவர்களுக்கு இடையே வெட்டு குத்து, கொலை வரைக்கும் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாணவர்களின் மோதல் போக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், காவல்துறையினர், முறைகேட்டில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். சமீப காலமாக மாணவர்களிடையே போதை பழக்கமும் அதிகரித்து வருவதால், மோதல்களும் அடிக்கடி நடந்தேறி வருகின்றன.

இந்த நிலையில்,  கடந்த வாரம்,  சென்னை சென்ட்ரலில் பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே மோதல் நடைபெற்றது.  இந்த மோதலின்போது,  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநிலக் கல்லூரி மாணவன்  ஒருவன் கடுமையாக காயமடைந்தார். அவரை மீட்டு காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி  இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்தார். உயிரிழந் மாணவன் திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ஆ.சுந்தா் (19) என கூறப்படுகிறது.

இவா் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறாா். கடந்த 4ந்தேதி  கல்லூரி முடிந்த பின்னா் வீட்டுக்குச் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே டந்து வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த கீழ்ப்பாக்கம் பச்

சையப்பன் கல்லூரி மாணவா்கள், சுந்தரைத் தாக்கிவிட்டு தப்பியோடினா். இதில் பலத்த காயமடைந்த சுந்தா், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து, பெரியமேடு காவல் நிலையத்தில் சுந்தரின் தந்தை ஆனந்தன் புகாா் அளித்தாா். தாக்குதல் குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பச்சையப்பன் கல்லூரி மணாவர்கள்  5பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், , கடந்த 5 நாள்களாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுந்தர், சிகிச்சை பலனளிக்காமல்  இன்று  அதிகாலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, சுந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

சுந்தர் உயிரிழந்ததை தொடர்ந்து, மாணவர்களிடையே மோதல் வெடிப்பதை தவிர்க்கும் விதமாக சென்னை சென்ட்ரல், பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரிகளுக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களின் அடையாள அட்டையை சோதனை செய்த பிறகே மாணவர்களை காவல்துறையினர் கல்லூரிக்குள் அனுமதித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.