பழனி: பழனிமலையில் உள்ள முருகனை தரிசிக்க இயக்கப்பட்டுவரும் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணிக்கா தற்காலிகமாக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றவது படை விடாக திகழ்வது பழனி. இங்கு மழைமீது எம்பெருமான் முருகன் ஆண்டியாக நின்று அருள்பாலித்து வருகிறார். இந்த மலைமீதுள்ள முருகனை தரிசிக்க படிகள் மீது ஏறி செல்ல வேண்டும். ஆனால், சிறுவர்கள், முதியவர்கள் படிகளில் ஏறிச்சென்று முருகனை தரிசிக்க சிரமப்படுவதால், கோவில் நிர்வாகம் சார்பில், மின் இழுவை ரயில், ரோப் கார் சேவைகளை பயன்படுத்தி பக்தர்களின் தரிசனத்துக்கு உதவி வருகிறது.
இந்த நிலையில், ரோப் கார் சேவை இன்று முதல் 40 நாட்கள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளனது. ரோப் கார் மூலம் மூன்று நிமிடத்தில் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம் என்ற நிலையில், தற்போது ரோப் கார் சேவை 40 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரோப் கார் சேவை இன்று (07.10.2024) முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோப் காரில் மேல் தளத்தில் புதிய சாஃப்ட்டுகள், புதிய கம்பி வடம் , உருளைகள் ,பெட்டிகள் பொருத்தபட்டு பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்ற பின்னர் ஐஐடி வல்லுனர் குழு ஆய்வு செய்த பிறகு ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகள் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், பக்தர்கள் படிப்பாதை , யானை பாதை ,மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அறிவித்துள்ளது.