டெல்லி

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அரியானா மற்றும் காஷ்மீரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கலாம் எனத் தெரிவிக்கின்றன

ஜம்மு காஷ்மீர் :

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்தது.

இந்த நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா:

ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 90 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்துள்ளது. அதில் அதிகாலை முதலே மாலை வரையிலும் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஹரியானா மாநிலத்தில் என்ன தான் பல பிராந்திய கட்சிகள் இருந்தாலும் அங்கு நேரடி போட்டி என்னவோ பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சியும் இடையே தான். இரு கட்சிகளும் தான் 90 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. இதில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் களமிறங்கியது. பல்வேறு காரணங்களால் இந்த முறை பாஜக மீது ஹரியானா மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்பட்டது.

நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன

அதன்படி

  • ஹரியானா கருத்துக்கணிப்பு முடிவுகள்:
  • டைனிக் பாஸ்கர்பாஜக 19-29 இடங்கள், காங்கிரஸ் 44-54 இடங்கள்
  • துருவ் ரிசர்ச்பாஜக 22-32, காங்கிரஸ் 50-64
  • இண்டியா டூடேசி வோட்டர்பாஜக 20-28, காங்கிரஸ் 50-58
  • ஜிஸ்ட்டிஃப் ரிசர்ச்பாஜக 29-37, காங்கிரஸ் 45-53
  • பீப்புள்ஸ் ப்ளஸ்பாஜக 20-32, காங்கிரஸ் 49-61
  • ரிபப்ளிக் பாரத்மட்ரீஸ்பாஜக 18-24, காங்கிரஸ் 55-62
  • ரிபப்ளிக் டிவிபிமார்க்பாஜக 27-35, காங்கிரஸ் 51-61

 

  • ஜம்மு காஷ்மீர் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
  • ஆக்ஸிஸ் மை இந்தியா:பாஜக 24- 34, காங்.+என்சிபி 35-45, பிடிபி 4-6
  • தைனிக் பாஸ்கர்பாஜக 20-25, காங்.+ என்சிபி 35-40, பிடிபி 4-7
  • இண்டியா டுடே சிவோட்டர்பாஜக 2 -32, காங்.+என்சிபி 40-48, பிடிபி 6-12
  • பிப்புள்ஸ் ப்ளஸ்பாஜக 23-27, காங்.+என்சிபி 46-50, பிடிபி, 7-1