மதுரை: கிராம பஞ்சாயத்துக்களில், மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருவதாக உயர்நீதி மன்றம் மதுரை கிளை  பரபரப்பை குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய முற்போக்கான திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம். இத்திட்டம் ஒட்டுமொத்த உலகிற்குமே ஒரு பாடமாக அமைந்துள்ளது. கிராமப்புறத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலையை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2005ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும்  குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை தரப்படும். அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திற்குள் வேலை வழங்கப்பட வேண்டும். வேலை வழங்கப்படாவிட்டால் ஊதியம் வழங்கப்பட வேண்டும். வேலை என்பது வாய்ப்பு என்று இல்லாமல் உரிமையாக பார்ப்பது என்றெல்லாம் வரையறுக்கப்பட்டது.

தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ரூ. 80 ஊதியம் வழங்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு நாளுக்கு ரூ.374 வழங்கப்பட்ட வருகிறது.  2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டு பின்னர் 2008 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

இதன்படி இந்த திட்டத்தில் பணியாற்றும் நபர் ஒருவருக்கு ஒரு நாளுக்கு 374/- ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமிப்பு வங்கி/அஞ்சலக கணக்குகள் மூலம் வாரந்தோறும் அல்லது இரண்டு வார அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் இந்த தொகையும் மாறுபடுகிறது.  இந்த திட்டத்தின் மூலம், கிராம ஊராட்சிகளில் சாலைகளை சீர் செய்வது, நீர் நிலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  குறிப்பாக, வேலை வாய்ப்பு, குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கான பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்டவற்றையும் இந்த திட்டம் வழங்குவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு உலக வங்கியின் பாராட்டுதலையும் இத்திட்டம் பெற்றுள்ளது. ஆனால், இந்த திட்டத்தால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஆகையால், இந்த திட்டத்தை விவசாய பணிகளுக்கும் விரிவாக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் ஒருபுறம் இருக்கிறது. மேலும், , 100 நாள் வேலைத் திட்டத்தில் தவறான வழிகாட்டுதல், தேவையற்ற வேலைகள், நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அதிகம் வருகின்றன. பலர் பணி செய்யாமலே ஆட்சியாளர்கள், அதிகாரிகள் துணையுடன் பணத்தை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் 2005ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இதன்பின்,

ஊரக பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு நபருக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்குவதை இந்த சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது.கிராம பஞ்சாயத்துகளே வேலை வழங்கும் பணிகளை மேற்கொள்கின்றன. 18 வயது பூர்த்தியான திறன் சாரா உடல் உழைப்பு கோரும் வேலை செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த பணி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்தில் நடந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றக்கிளை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, “மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருகின்றனர். மகாத்மா பெயரை வைத்து கொண்டு முறைகேடு செய்வது வியப்பாக உள்ளது.

இத்திட்டம் அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை முறையாக கண்காணிப்பது இல்லை. அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதும் இல்லை. கண்காணிப்பதும் இல்லை எனக்கூறியதுடன், மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநரகம், தமிழக ஊரக வளர்ச்சி துறை செயலர், கரூர் ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.