சென்னை : தமிழ்நாட்டில் தற்போது டெங்கு இல்லை; பதட்டம் வேண்டாம் என கூறிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தமிழ்நாட்டில் எங்கே டெங்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக சளி இருமல் மற்றும் தொண்டை வலியுடன் விஷக் காய்ச்சல் பரவி வருகிறது. இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா நோய்கள் பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தமிழ்நாட்டில் தற்போது டெங்கு  போன்ற விஷக்காய்ச்சல் பரவல் ஏதும் இல்லை என மறுத்தவுடன், இதுகுறித்து பொதுமக்கள்  பதட்டப்பட வேண்டாம் என்றார்.

மேலும், தமிழ்நாட்டில் எங்கே டெங்கு பரவியுள்ளது என்பதை எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன், கடந்த  2012-17 அதிமுக ஆட்சி காலத்தில்தான் டெங்கு இறப்பு அதிகம் என்று பழைய கணக்கை தெரிவித்தவர், தமிழ்நாட்டில்,  இப்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு எங்குமில்லை என்றும்  குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல்கள் வேகமாக பரவுகிறது! எடப்பாடி பழனிச்சாமி…