புதுக்கோட்டை : சேது எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இது உடனடியாக அணைக்கப்பட்டதால், அதில் பயணம் செய்த பயணிகள்   அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சேது எக்ஸ்பிரஸ் ரயில், நார்த்தாமலை அருகே சென்ற போது எஞ்சினில் உள்ள வால்வில் தீப்பிடித்தது. ஓட்டுநர் ரயிலை நிறுத்தி தீயை கட்டுப்படுத்தியதை அடுத்து மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு ரயில் புறப்பட்டது.  இதனால், நார்த்தாமலையில் ஒன்றரை மணி நேரம் ரயில் நின்றதால் மறுமுனையில் சேது விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதமானது.

ரெயில் ஓட்டுநரின் சாதுரியமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விசாரடிணயில், புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த ராமேஸ்வரம் விரைவு ரெயில் புகை போக்கியில் தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் புகை போக்கியில் உள்ள டியூப் வெடித்ததால் பற்றி எரிந்த நெருப்பால் பயணிகள் பீதியில் உறைந்தனர். உடனடியாக விரைவு ரெயிலை நிறுத்தி சாதுரியமாக செயல்பட்ட ரெயில் ஓட்டுநரின் செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.