மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலை 6:55 மணி முதல் இரவு 9:25 வரை மட்டுமே இயங்கி வந்த நிலையில் இனி இரவிலும் விமானங்கள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மதுரை விமான நிலையத்தின் விமான போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் மற்ற நகரங்களுடனான நேரடி விமான சேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel