பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் அலீம் தார் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக நடுவராக இருந்து வரும் அலீம் தார் உலகின் சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

56 வயதான அலீம் தார் 2023 மார்ச் மாதம் ஐசிசியின் எலைட் நடுவர் குழுவில் இருந்து விலகினார், இருந்தபோதும் ODI மற்றும் T20I நடுவராக செயல்பட்டு வந்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் அவர் பங்கேற்றார்.

பாகிஸ்தானில் கிரிக்கெட் சீசன் துவங்க உள்ள நிலையில் அலீம் தார் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 2025 இல் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இதைத் தொடர்ந்து மே மாதம் பிஎஸ்எல் 2025 தொடங்க உள்ளது.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச நடுவராக அலீம் தார் கடைசியாக களமிறங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில். பாகிஸ்தானில் நடைபெறும் அந்தப் போட்டியே அவருக்கு உரிய மரியாதையுடன் பிரியாவிடை கொடுக்க வாய்ப்பு உள்ள போட்டியாகக் கருதப்படுகிறது.