சீனா ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM ) சோதனையை இன்று நடத்தியுள்ளது.

டம்மி குண்டுகளை சுமந்து சென்ற இந்த ICBM பசிபிக் பெருங்கடலில் வரையறுக்கப்பட்ட பகுதியில் விழுந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாலமன் தீவுகள், நவ்ரு, கில்பர்ட் தீவுகள், துவாலு, மேற்கு சமோவா, பிஜி மற்றும் நியூ ஹெப்ரைட்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றதாகக் கூறப்பதுகிறது.

சீன ராணுவத்தின் வழக்கமான பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சோதனை சர்வதேச சட்டத்திற்கு இணங்குவதாகவும், எந்தவொரு நாட்டிற்கும் அல்லது இலக்கிற்கும் எதிராக இயக்கப்படவில்லை என்றும் அது கூறியது.

1980 ஆம் ஆண்டில், தென் பசிபிக் பகுதியில் சீனா தனது ICBM ஐ அறிமுகப்படுத்தியது.

சீனா தனது ஏவுகணைகளை குவித்து வருவதாக அமெரிக்கா கூறிவரும் நிலையில் அதில் எத்தனை ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை தனது ராணுவ தளவாடத்தில் சேர்த்துள்ளது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகள் பெய்ஜிங்குடன் பிராந்திய மோதல்களைக் கொண்டிருந்தாலும், சீனாவின் முக்கிய உலகளாவிய போட்டியாளராக அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.