சென்னை
நீதிபதி அல்லி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன், உயர்நீதிமன்ன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
எனவே சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமை பதிவாளராக நியமிக்கட்டுள்ள நீதிபதி எஸ்.அல்லி தற்போது செந்தில் பாலாஜி, ஜாபர் சாதிக் வழக்குகளை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel