ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு தங்கப்பதக்கம் உறுதியாகி உள்ளது.

அமெரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 10வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவுக்கு எதிரான நான்கு ஆட்டங்களில் குகேஷ் மற்றும் அா்ஜுன் எரிகைசி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெஸ்லி-க்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்த நிலையில் லெவோன் ஆரோனினுக்கு எதிரான ஆட்டத்தை விதித் குஜராத்தி டிரா செய்தார்.

8வது சுற்றில் ஈரான் அணியை வெற்றி கொண்ட இந்திய அணி தொடர்ந்து 8 சுற்றில் வெற்றி பெற்ற நிலையில் 9வது சுற்றில் உஸ்பேகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

அமெரிக்காவுடனான இந்த வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது சீனா இரண்டாவது இடத்தில் 17 புள்ளிகளுடன் உள்ளது.

11வது மற்றும் இறுதி சுற்றில் ஸ்லோவேனியா அணியை எதிர்கொள்ள இருக்கும் இந்திய அணி அந்த அணியுடன் டிரா செய்தால் கூட தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

தவிர, 4-0 என்ற கணக்கில் ஸ்லோவேனியா-விடம் தோல்வி அடைந்தாலும் போட்டியின் டை-பிரேக்கர் விதிகளின் படி ஏற்கனவே சீனாவை வென்றுள்ளதால் இந்தியாவுக்கு தங்கம் வழங்கப்படும்.

அதேவேளையில், இந்தியா ஸ்லோவேனியா-விடம் 4-0 என்ற கணக்கில் தோற்று அமெரிக்காவுடனான இறுதி சுற்றில் சீனா 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் மட்டுமே சீனாவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுவரை இந்த போட்டி தொடரில் இந்திய அணி விளையாடி வந்த விதம் மற்றும் வெற்றிகளை கணக்கிடும் போது தனது இறுதி சுற்றில் வெற்றி பெற்று முதல் முறையாக FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாறு படைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

FIDE செஸ் ஒலிம்பியாட் இந்திய அணி தொடர் வெற்றி… குகேஷின் சிறப்பான ஆட்டத்தால் 7வது சுற்றில் சீனாவை வென்றது…