ஆப்பிள் iPhone 16 விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் அந்நிறுவன ஊழியர்களுக்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை 2007ம் ஆண்டு துவங்கியது.

பெரிய திரை அளவுகள், வீடியோ-பதிவு, வாட்டர்-ப்ரூப், கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஐபோன் மாடல்களை அந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருவதுடன் அதன் அளவு மற்றும் எடையைக் கொண்டு வெவ்வேறு வேரியண்ட்களை வழங்குகிறது.

இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு அம்சத்துடன் கூடிய ஐபோன் 16 / 16 Plus – 16 Pro / 16 Pro Max என நான்கு வகையான ஸ்மார்ட்போனை கடந்த செப்டம்பர் 9ம் தேதி அறிமுகம் செய்தது.

இதன் விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் வார விற்பனை அதே முதல் வாரத்தில் ஐபோன் 15 விற்பனையானதை விட 13 சதவீதம் குறைவாக அதாவது 3.7 கோடி போன்கள் மட்டுமே உலகம் முழுவதும் விற்பனையாகி உள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 250 கோடி ஐபோன்கள் இதுவரை விற்பனையாகி உள்ள நிலையில் தாங்கள் பயன்படுத்தும் மாடலில் உள்ள பல அம்சங்கள் உபயோகமில்லாமல் போவது அல்லது மொபைல் திருடப்பட்டது அல்லது சேதமடைந்த காரணங்களால் புதிய ஐபோன் மாடல்களை பலரும் வாங்கி வந்தனர்.

இந்த நிலையில் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 16 மாடல் அதன் ஊழியர்களுக்கு என்று பிரத்தேயகமாக வழங்கப்படும் தள்ளுபடி விலையில் அவர்களுக்கு விற்பனையை துவக்கி உள்ளது.

வழக்கமாக புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பல வாரங்கள் கழித்த பிறகே ஊழியர்களுக்கான தள்ளுபடி விற்பனை துவங்கும் நிலையில் ஐபோன் 16 விற்பனை துவங்கிய ஓரிரு வாரங்களில் ஊழியர்களுக்கு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுவதை அடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.