சென்னை:  ரூ.60 லட்சம் வரி பாக்கியை செலுத்தாத  2 தியேட்டர்களுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நகங்கர்நல்லூரி கடந்த சில ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. அங்கு குமரன் சினிமா ஹால்,  PVR சினிமாஸ்,  வெற்றிவேல் சினிமாஸ், வேலன் ஏசி தியேட்டர்., ஜெயலட்சுமி சினிமா ஹால்.,  ஏரோ பிவிஆர் தியேட்டர், குமரன் தியேட்டர், திரைப்பட கிரகம் என பல தியேட்டர்கள் உள்ளன.

இதில்,  வெற்றிவேல் சினிமாஸ், வேலன் ஏசி தியேட்டர் நிர்வாகத்தினர் கடந்த 6 ஆண்டுகளாக வரி கட்டாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் பல முறை நினைவுபடுத்தியும், அவர்கள் வரிகளை முறையாக கட்டாததால், வரி நிலுவை ரூ.60 லட்நசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியாக அதிரடியாக இரண்டு சினிமா தியேட்டர்களுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பிட்ட இரண்டு தியேட்டர்களும்  6 ஆண்டாக வரி கட்டாமல்  ரூ.60 லட்சமை நிலுவையில் வைத்துள்ளதை குறிப்பிட்டு,   நங்கநல்லூர் வெற்றிவேல், வேலன் ஆகிய 2 திரையரங்குகளுக்கு சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக நோட்டீசும் திரையரங்கின் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது.

2018-ல் இருந்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.60 லட்சம் வரி தொகையை பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.