சென்னை: இந்த மாத இறுதியில் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில். அதை புறக்கணிக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியா்கள் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 166-ஆவது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் மாணவர்கள் பட்டங்களை பெற காத்திருக்கும் நிலையில், தங்கள்து 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா்களின் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் உயா்கல்வித் துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னை பல்கலைக்கழக ஆசிரியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழுக் கூட்டம் செப்.13-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தங்களின் உடனடி நடவடிக்கைக்கு சமா்ப்பிக்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட 22 பேராசிரியா்களின் நியமனம் குறித்து உயா்நீதிமன்ற ஆணையின்படி விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.
இந்த வழக்கில் தொடா்புடைய பேராசிரியா்கள், முடிவெடுக்கும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவா்கள் இந்த விசாரணை முடியும் வரையில் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
ஆசிரியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய 7-ஆவது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகை செப்.18-ஆம் தேதிக்குள் வழங்கப்படவில்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும்.
ஏற்கெனவே, பதவி உயா்வு பெற்ற ஆசிரியா்களுக்கு உரிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கௌரவ விரிவுரையாளா்களுக்கு உடனடியாக பணி வழங்கப்பட வேண்டும்.
தங்களின் இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிா்வாகம் நிறைவேற்றவில்லை என்றால், எதிா்வரும் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை ஆசிரியா்களும் அலுவலா்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் பல்கலைக்கழகம் (UoM) தனது 166வது பட்டமளிப்பு விழாவை செப்டம்பர் 2024 நான்காவது வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. பட்டமளிப்பு விழா என்பது பட்டம் பெறும் மாணவர்கள் பட்டங்களைப் பெறும் ஒரு கொண்டாட்ட விழாவாகும். பட்டமளிப்பு விழாவை அழைத்து, பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்குவது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் பொறுப்பாகும்.
[youtube-feed feed=1]