சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி சீல்’ வைத்து மாதிரி, சென்னையில் கோடிக்கணக்கில் குத்தகை மற்றும் வாடகை  பாக்கி வைத்துள்ள பல்வேறு கிளப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் கையகப்படுத்தி   தமிழ்நாடு அரசு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

சென்னையில் செயல்பட்டு வரும் முக்கியமான கிளப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மட்டும் ரூ.5ஆயிரம் கோடிகளுக்கு மேல் குத்தகை மற்றும் வாடகை பாக்கிகள் வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தமிழ்நாடு அரசு வசூலிப்பது எப்போது, அரசின் நிலத்தை மீட்ப்பது எப்போது என  என சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும்  கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள ஏராளமான கிளப்புகள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு பூங்காங்கள், கடற்கரை பகுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் போன்றவை தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இடங்களை 99 ஆண்டுகள் குத்தகை என்ற பெயரில் வாங்கி, முறையாக வாடகை மற்றும் குத்தகை பாக்கி செலுத்தாமல் கோலோச்சி வருகின்றன. இதுபோன்ற இடங்களுக்கு  மிக மிக குறைந்த அளவிலேயே வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், குத்தகைதாரர்கள் அதைக்கூட செலுத்த மறுத்து கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளனர். மேலும், அந்த குத்தகை இடங்களில் பல்வேறு வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கிளப்கள், கடைகள் போன்றவற்றை கட்டி,  மேல் வாடகைக்கு விட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

அதனால், இதுபோன்ற குத்தகை நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கான வாடகையை தமிழ்நாடு அரசு உயர்த்தியது.  மேலும் பழைய பாக்கியையும் உடனே கட்ட வலியுறுத்தி வந்தது. ஆனால், குத்தகை நிறுவனங்கள், முறையாக வாடகையையை கொடுக்காமல், அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்குகளை போட்டு இழுத்தடித்து வருகின்றனர். இதனால், அவர்களிடம் இருந்து குத்தகை பாக்கி  வசூலிக்கப்படுவதில் அதிக கால தாமதம் எற்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  கிண்டியில் உள்ள 148 ஏக்கர் நிலத்தை மீட்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை  உயர்நீதிமன்றம் உறுதி செய்ததன் காரணமாக வழக்கு கள் முடிவடைந்து நிதிமன்ற உத்தரவின் படி, அந்த கிளப்புக்கு தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையினர் சீல் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.  இந்தியாவின் பழமையான பந்தய நிறுவனங்களில் ஒன்றான மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் வாயில்கள் சீல் வைக்கப்பட்டன. ரூ.730 கோடி வாடகை பாக்கியை ரேஸ் கிளப் செலுத்தத் தவறியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து திங்கள்கிழமை தமிழக அரசு சீல் வைக்கும் நடவடிக்கையை எடுத்தது. இது பெரும் வரவேற்பை பெற்றதுடன், விவாதப் பொருளாகவும் மாறியது.

இதைத்தொடர்ந்து குத்தகை பாக்கி வைத்துள்ள மேலும் பல கிளப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  சென்னையில் செயல்படும்  பல முக்கிய கிளப்புகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் போன்றவை  அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து, அதை மேல் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருவதுடன், அரசுக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வாடகை பாக்கிகளை செலுத்த மறுத்து வருவது தெரிய வந்துள்ளது.  

சென்னையில் 100 நிறுவனங்கள் அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலின்படி, சென்னை மாநகராட்சிக்கு சுமார் 22 கோடியே 43 லட்சத்து 92ஆயிரத்து 188 ரூபாய் பாக்கி இருப்பதாக பட்டியல் வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், பெரு நிறுவனங்களான கிளப் மற்றும் கல்வி நிறுவனங்கள் பல நூறு கோடி ரூபாய்கள் தமிழ்நாடு அரசுக்கு பாக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி,

சென்னை கிண்டி ரேஸ் கிளப் – ரூ.812.5 கோடிகள்

காஸ்மோபாலிடன் கிளப் – ரூ. 34. 75 கோடிகள்

மெட்ராஸ் யுனைடெட் கிளப் ரூ. 24.63 கோடிகள்

ஷீஃபியர்ஸ் கிளப்   ரூ.23.14 கோடிகள்

காந்திநகர் கிரிக்கெட் கிளப் ரூ. 2 கோடிகள்

சென்னை பிரஸ் கிளப் ரூ. 88 லட்சங்கள்

பி,டி,செங்கல்வராயன் அறக்கட்டளை ரூ.129. 83 கோடிகள்

டிஆர்பிசிசி ஸ்கூல்  ரூ.15.79 கோடிகள்

கலாச்சேத்ரா (திருவான்மியூர்)  ரூ. 2.93 கோடிகள்

அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் ரூ.25 லட்சம்

ஆல் இந்தியா ரேடியோ (சென்னை வானொலி) ரூ. 39 கோடிகள்

சத்யா ஸ்டியோ (ஜானகி எம்ஜிஆர் கல்லூரி) ரூ. 31.06 கோடிகள்

இந்த பெரு நிறுவனங்கள் மட்டுமே சுமார் ரூ.5ஆயிரம் கோடிகள் வரை பாக்கி வைத்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஏதும் மக்கள் பணியாற்றவில்லை என்பதும், வருமானத்தை மட்டுமே பெரும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கும்போது, ஒரு சிலர் மட்டுமே பணம் சம்பாதிக்கும் இதுபோன்ற குத்தகை திட்டத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதிசிக்கலில் சிக்கி தள்ளாடும் தமிழ்நாடு அரசு, இதுபோன்ற பெரு நிறுவனங்களை கைப்பற்றி, அவர்கள் தர வேண்டிய குத்தகை பாக்கியை வசூலித்தாலே நிதி சிக்கலின் ஒரு பகுதி தீர்க்கப்பட்டு விடும்.

உண்மை நிலவரம்  இப்படி இருக்கும்போது,  திமுக அரசும், சென்னை மாநகராட்சியும் வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு போன்றவற்றை  சாமானிய மக்களின் தலையில் சுமத்தி, வசூலித்து வருவது வேதனையான விஷயமே.

மத்திய மோடி அரசு, அதானி, அம்பானி போன்ற நிறுவனங்களுக்கு வரி தள்ளுபடி செய்வதாக குற்றம் சாட்டும் திமுக அரசு,  தமிழ்நாட்டில்  நூற்றுக்கணக்கான பெரு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் வரி ஏய்ப்பு  செய்து வருவதை தெரிந்தும், அதன்மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன், சாமானிய மக்களை வற்புறுத்தி வரியை வசூலிக்கும் அரசு, பெறு நிறுவனங்களிடமும் வரிஎ  வசூலிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் அவா…

செய்யுமா திராவிட மாடல் அரசு… பொறுத்திருந்து பார்ப்போம்…

1777 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மெட்ராஸ் ரேஸ் கிளப், நாட்டின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயங்களில் சிலவற்றை நடத்தியது, இந்தியா முழுவதிலும் இருந்து உயரடுக்கு கூட்டத்தை ஈர்த்தது. 1946 ஆம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் அரசாங்கத்தால் 99 வருட குத்தகைக்கு முறைப்படி $614 வருடாந்திர வாடகைக்கு வழங்கப்பட்டது. அப்போதிருந்து, கிளப் அதன் வசதிகளை விருந்து அரங்குகள், உறுப்பினர்களுக்கான பிரத்யேக ஓய்வறைகள் மற்றும் நூற்றுக்கணக்கான குதிரைகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியுள்ளது. ஆனால், பின்னர் அதில் ஏராளமான கட்டிடங்களை கட்டி வருமானத்தை ஈட்டி வருகிறது. இந்த கட்டிடங்கள் அனைத்தும்,  அரசின்  அனுமதியின்றி க கட்டப்பட்டது. அதுபோலவே பல்வேறு கிளப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சொத்தின் சில பகுதிகளை அங்கீகரிக்கப்படாமல் மேல் வாடகைக்கு விட்டு கல்லா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிக வரி பாக்கி வைத்துள்ள 100 நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பெயர்கள் பட்டியல்… _(கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்து பார்க்கவும்)

TOP 100-DEFAULTERS LIST-Chennai-2024