டெல்லி: மத்தியஅரசு ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாசம் நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 14 வரை நீட்டிப்பு செய்து அறிவித்து உள்ளது.

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் (செப்டம்பர் 14ந்தேதி) உடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாத கால அவகாசத் துடன் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆதார் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அனைத்து வகையான பரிவர்த்தனை மற்றும் சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தனித்துவமான ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமறை புதுப்பித்துக்கொள்ள  மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, 0 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யலாம் அல்லது இசென்டர், தபால் நிலையம், வங்கிகளிக்கு சென்று அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதற்கான அவகாசம் பல முறை வழங்கப்பட்டு வந்தது. இறுதியாக செப்டம்பர் 14ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் இலவசமாக தங்களது புதுப்பித்தலை செய்துகொள்ளுங்கள் என அறிவித்திரந்தது. இந்த நிலையில்,  ஆதார் புதுப்பித்தலுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14ந்தேதி (நாளை மறுதினம்) முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி ஆதார் ஆணையம் அறிவித்து உள்ளது.