கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பர்ம் அருகே மேம்பாலத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு. முட்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இவை இரண்டும் அந்த பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோருது, எதிர்பாராத விதமாக கார் மற்றும் லாரி நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த போற விதத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, காரை லாரியில் இருந்து அகற்றி, காருக்குள் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் அந்த காரில் பயணம் செய்த யாசர் அராபத் (40), முகமது அன்வர் (58), ஹாஜிதா பேகம் (62), சாரா பாத் நிஷா (30), அப்னான் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
ஐந்து பேர் உடல்களையும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.அதன்படி
விசாரணையில், இவர்கள் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சமூக தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.