சென்னை: பெண் மருத்துவர் பாலியல் கொலை கண்டித்து, கொல்கத்தாவில் ஜுனியர் டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அவர்கள் பணிக்கு திருப்ப உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில், அதை ஏற்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும் ஜூனியர் டாக்டர்கள் அறிவித்து உள்ளனர். மேலும் இன்று மாநில சுகாதரத்தையை கண்டித்து பேரணி செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு வங்காள மாநிலத்தில் பெண்களக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுகிறது. இதை தனது அரசியல் லாபத்துக்காக மம்தா பானர்ஜி கட்டுப்படுத்த தவறி வருகிறார். இதன் பாதிப்பு தற்போது மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் கொடுமையான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த மாதம் கும்பலால் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தாமாகவே விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதி மன்றம், மம்தா அரசை கடுமையாக சாடியதுடன், மருத்துவர்கள் பணிக்கு திரும்ப அறிவுறுத்தினர். இதையடுத்து அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றது. ஆனால், மேற்குவங்க மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து விட்டனர்.
கடந்த ஓரு மாதத்துக்கும் மேலாக டாக்டர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். நள்ளிரவு போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதனால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிக்கு துணைபோகும் மம்தா அரசுக்கு ஆதரவாக, மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் ஆஜராகி உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், அவர் அதை பொருட்படுத்தாமல் மனிதாபிமானம் இன்றி, பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு உண்மைக்கு புறம்பாக வாதாடி வருகிறார்.
நேற்றைய விசாரணையின்போதும், மம்தா அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், டாக்டர்களின் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தில் 23 நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக கூறி, அது குறித்த சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்ற மாநில அரசின் உறுதியையும் கபில்சிபல் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து உச்சநிதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மேற்கு வங்காளத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் நாளை (இன்று) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இளநிலை டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினால் எந்தவிதமான பாதகமான நடவடிக்கையும் இருக்காது. தவறினால் நடவடிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.
மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பான டாக்டர்களின் கவலைகளை போக்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உச்சநீதி மன்ற உத்தரவை மருத்துவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநில சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார கல்வி இயக்குனர் (டிஹெச்இ) பதவி விலக கோரி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், இன்று மதியம் சுகாதாரத்துறையின் தலைமையகமான ‘ஸ்வஸ்த்ய பவனுக்கு’ பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவில்லை. நாங்கள் எங்கள் போராட்டத்தையும் ‘நிறுத்தாமல் பணியையும்’ தொடர்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.