சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதுமான போலீசார் நியமிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுமீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி  தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கொலை, பாலியல் வன்முறை போனற் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசையும், காவல்துறையையும் கடுமையாக சாடியிருந்தது.

இந்த நிலையில், சென்னையின் புறநகர் பகுதியான பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது இதை கட்டுப்படுத்துவதில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பானது மற்றும்  பெரும்பாக்கம் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பான வழக்கில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக சாடியது.

 “தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கபடவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், சென்னை  பெரும்பாக்கம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுகிறது என மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளத என்பதை சுட்டிக்காட்டியது.

இதற்கு பதில் கூறிய அரச வழக்கறிஞர், சென்னையில்,  போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 180 போலீசார் பணியில் உள்ளனர் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள்,  தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போதுமான போலீசார் இல்லை என்று கூறியதுடன், சென்னையில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கக்கூடிய சூழலில் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.  போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகள்  திருப்திகரமாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கொடி பறக்கும் போதை பொருள் விற்பனை: இளம் காதல் ஜோடி கைது!

தமிழ்நாட்டை  போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு திமுகஅரசே காரணம்! எடப்பாடி பழனிச்சாமி