சென்னை’

ம்ழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரியில் அதிக திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தியதற்கான விளக்கத்தை உயர்நிதிமன்றம் கேட்டுள்ளது.

விவசாயத்துக்காக் சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் துவங்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சேலம், வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, தமிழக அரசு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.