பாலஸ்தீன தீவிரவாத குழுவான ஹமாஸுடன் போர் நிறுத்த உடன்பாடு செய்ய வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலிய தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் இந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தால் நெதன்யாகு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்தாமல் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்தால் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் சவப்பெட்டியில் தான் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகளை ராணுவம் நெருங்கிய நிலையில் 6 பிணைக்கைதிகளை கொன்றுவிட்டு தப்பியதாகவும் அந்த பிணைக்கைதிகளின் சடலங்களை இஸ்ரேல் ராணுவம் இறுதினங்களுக்கு முன் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இஸ்ரேல் தொடர்ந்து தங்கள் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு தங்களை நெருங்க நினைத்தால் பிணைக்கைதிகள் சவப்பெட்டியில் தான் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.