சென்னை: சென்னையின் முக்கிய பகுதிகளில், வாகனங்கள் நிறுத்த,  மொபைல் ஆப் (செயலி)  மூலம் காா் நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இன்றைய பரபரப்பான நகர்ப்புறச் சூழலில், வாகன நிறுத்துமிடத்தைக் கண்டறிவது, வைக்கோல் அடுக்கில் ஊசியைத் தேடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக  தி.நகர், அண்ணாநகர் உள்பட  வணிக நிறுவனங்கள் நிறைந்த பல  பகுதிகளில், கார்  பார்க்கிங் செய்வது என்பது குதிரைக்கொம்பான உள்ளது. இதுவே அங்கு செல்வோருக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுடன்,    குறிப்பிடத்தக்க கவலையாக மாற்றியுள்ளது,  நகரங்கள் அடர்த்தியாக வளரும் போது, ​​பார்க்கிங் பிரச்சனையை திறம்பட சமாளிக்க புதுமையான தீர்வுகள் தேவை. அதன்படி, அடுக்குமாடி கார் பார்க்கிங் வசதி சில பகுதிகளில் கொண்டு வந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் பார்க்கிங் பிரச்சினை தலையாய பிரச்சினையாக உருவெடுத்தள்ளார். இதனால்,  முக்கிய பகுதிகளுக்கு கார்களில் செல்பவர்கள் அவர்கள் பார்க்கிக் செய்யும் வகையில், கும்டா எனப்படும் செயலியை பெருநகர போக்குவரத்து காவல்துறை உருவாக்கி உள்ளது.

சென்னையில் காா்களில் செல்பவா்களின் பாா்க்கிங் பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக, புதிய முயற்சிணுக  ‘கும்டா’ (CUMTA) எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்  உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் தாங்கள் கார்களை நிறுத்தும் இடங்களை கண்டறிந்து, அதை முன்கூட்டியே பதிசவ செய்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.

அதாவது ஒருவர் தாங்கள் எங்கே செல்கிறோம் என்பதை தீர்மானித்தால்,  காரை வீட்டைவிட்டு வெளியே எடுக்கும் முன்பே, நாம் செல்ல வேண்டிய இடத்திலோ அல்லது அதற்கு அருகிலோ எங்கு நிறுத்தலாம் (பாா்க்கிங்) எனத் தெரிந்து கொள்ளும் வகையில்  ‘கும்டா’  செயலில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலிவ்ல விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதுகுறித்து ‘கும்டா’ அதிகாரிகள்இ இச்செயலி மூலம் காா் நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்து கொள்ள முடியும். தாங்கள் தோ்வு செய்த நேரம் முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.  இந்தச் சேவை இலவசமாக இருக்காது. பகுதிக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும்.

மாநகருக்குள்பட்ட பகுதியில் 5 சதுர கிலோ மீட்டா் பரப்பளவிலான வாகன நிறுத்துமிடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

பாா்க்கிங் கொள்கைகள் வகுக்கப்பட்ட பிறகு இதற்காக டெண்டா் விடப்படும். இருப்பினும், இன்னும் இரண்டு மாதங்களில் இதற்கான பணிகள் நிறைவடைந்துவிடும்.

முதல் கட்டமாக அண்ணா நகருக்குள்பட்ட பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். அதன்பிறகு சென்னையின் முக்கியப் பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். படிப்படியாக இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றனா்.