சென்னை

கொல்கத்தாவில் ஒரு பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதால் தமிழக அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஒரு பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.  இதையொட்டி நாடெங்கும் உள்ள மருத்துவர்கள் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பல இடங்களில் அவசர சிகிச்சை தவிர மற்றவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு இதில் தலையிட்டு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.  இந்நிலையில் தமிழக அரசு மருத்துவர்களின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது

அதன்படி,

“தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் காவல்துறை மையம் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது  மேலும் மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி காமிராக்கள் பொருத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் பணி புரியும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசாஇ மற்றும் பாதுகாப்பு என 2 குழுக்கள் அமைக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்வையாளர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்க வேண்டும்.  மேலும் அனைத்து பார்வையாளர்களுக்கும் அடையாள் அட்டை அளிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் பதாகை வைக்க வேண்டும்’

என அறிவிக்கப்படுள்ளது.