டெல்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 8 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்

வரும் 8 ஆம் தேதி முதல் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல்காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
வருகிற 8 முதல் 10-ந் தேதி வரையிலான இந்த பயணத்தின்போது டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்கு ராகுல்காந்தி செல்கிறார்.
அப்போது ராகுல் காந்தி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடனும், இந்திய வம்சாவளி மக்களுடனும் உரையாடல்களை நடத்த உள்ளார்.
Patrikai.com official YouTube Channel