சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய துடித்து வரும் தமிழ்நாடு அரசு தற்போது அவர்மீத சீமான் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக திருச்சி ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருடன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் சீமானை கைது செய்ய காவல்துறையினர் சமயம் பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அவர்ன்மீது திடீரென வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. இதன் காரணமாக சீமான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுக சார்பில் வெளியான பிரசாரடா பாடலில் இடம்பெற்றிருந்த பாடல் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பேசும்பொருளாக மாறியது. நாம் தமிழர் கட்சியினர் திமுகவை விமர்சித்து பாடிய அந்த பாடல் மற்றும் வந்த சண்டாளன் என்ற வார்த்தையானது ஒரு குறிப்பிட்ட ‘சாதி’யை குறிப்பதாக கூறப்பட்டது.
இந்த பாடல் கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் பிரசார மேடைகளில் பாடப்பட்டு வந்த நிலையில், தற்போதுதான், இதை சாதி என குறிப்பிட்டு, சர்ச்சை ஏற்பட்டது. இதனால் நாம் தமிழர் கட்சி சீமான், இந்த வார்த்தையை ஏற்கனவே மறைந்த கருணாநிதி பேசியிருக்கிறார், அவர்மீது நடவடிக்கை எடுப்பீர்களா என கேள்வி எழுப்பியதுடன், அந்த பாடலை மீண்டும் பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசும் சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டதாக தகவல்கள் பரவின. இதற்கிடையில், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஷ் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின்பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சீமான் மீது, எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வார்த்தையை பயன்படுத்தியதால் புகார் பதிவு செய்ப்பட்டு உள்ளது.
இந்த புகார் காரணமாக சீமான் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கருணாநிதி தொடர்பான பாட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அந்த பாட்டை பாடி இசையமைத்து வெளியிட்டது அதிமுக என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக மேடைகளில் அந்த பாட்டு ஒலிபரப்பப்பட்டது என்றும் அன்றைக்கு தி.மு.கவினருக்கு எந்த வருத்தமோ, கோபமோ, இழிவோ ஏதும் தெரியவில்லை என்றும் அவருக்கு கூறினார்.
மேலும் அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவது இவற்றின் ஆதித்தாய் தி.மு.க. தான் என விமர்சித்த சீமான், இந்திரா காந்தி, ஜெயலலிதா குறித்து தி.மு.க. அவதூறாக பேசியதாகவும், ஒவ்வொரு தலைவர்களை பற்றி கருணாநிதி விமர்சித்ததாகவும் குறிப்பிட்டார். மற்றவர்களை இழிவாக பேசுவதற்கு தி.மு.க. ஆட்களை வைத்துள்ளது என்றும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் மாற்று கட்சி பெண்களை இழிவாக பேசுகின்றனர் என்றும் சீமான் குற்றம் சாட்டினார். நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.கவிற்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். சளுக்கர்கள், சண்டாளர்கள் என்ற வார்த்தைகளை எல்லாம் அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதிதான் என்றும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சேதுசமுத்திர திட்டத்தை அதிமுக எதிர்த்ததற்காக, அக்கட்சியை சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் சீமான் கூறினார்.
அரசியல் கட்சி தலைவர்போல அட்ராசிட்டி: காவல்துறை அதிகாரி வருண்குமார் – சீமான் மோதல் உச்சக்கட்டம்