திருச்சி

நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காவல்துறை அதிகாரி வருண்குமார் இடையே தகராறு மேலும் வலுவடைந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வருரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூ டியூபருமான சாட்டை துரைமுருகன் அண்மையில் கைது செய்யப்பட்டார். இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

நா த க கட்சியை சேர்ந்த சிலர் எக்ஸ் சமூக வலைதளத்தில் எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரை பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே எக்ஸ் வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாகவும், இது போன்று அவதூறு பரப்புகிறவர்களையும், அதனை தூண்டுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாகவும் எஸ்பி வருண்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் தானும், புதுக்கோட்டை எஸ்பியாக உள்ள தனது மனைவி வந்திதா பாண்டேவும், எக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வருண் குமார் அறிவித்தார்.  அதற்கு பிறகும் சீமான் மற்றும் வருண்குமார் இடையே அறிக்கைப்போர் தொடர்ந்து வருகிற்து.

ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தனது வாட்ஸ்அப்பில்

 ”நான் வகிக்கும் ஐபிஎஸ் மற்றும் எஸ்.பி பதவி என்பது திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ வந்தது அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வியர்வை சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை”

என ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.