சென்னை

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக தனியார் அமைப்பு ஒன்று வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அண்ணா பல்கலைக்கழகம் இதில் தீவிரம் காட்டிபேராசிரியர்கள் விவரங்களை பார்த்து அதில் போலியாக, முறைகேடாக சேர்ந்தவர்கள் விவரங்களை சேகரித்தது.

மேலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இதற்காக 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு அந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.  , அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட சுமார் 900 பேராசிரியர்களுக்கு  வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இதற்கு சிண்டிகேட் நிர்வாகிகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.