வாஷிங்டன்

சுனிதா வில்லியம்ஸ் வரும் 2025 ஆம் வருடம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது.

தனியார் அமெரிக்க நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர், விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபர்களை ஏற்றிச் செல்லும் 2வது தனியார் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும். முதல்முறையாக அது விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்த நிலையில் அதை ஏந்திச் செல்லும் அட்லாஸ் ராக்கெட்டில் பழுது இருந்ததால் திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஜூன் 5 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோருடன் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அவர்கள் இருவரும் அதே விண்கலம் மூலம் கடந்த ஜூன் 14-ம் தேதி மீண்டும் பூமி திரும்புவதாக இருந்தது.  ஆனால் தொழில்நுட்ப பிரச்னைகள் காரணாக அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இருவரும் ஜூன் 26-ம் தேதி பூமி திரும்புவதாகவும் கூறப்பட்டது. பிறகு அந்தத் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

நாசா விஞ்ஞானிகள்

”ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் 80 நாட்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புகிறார்கள். போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலனை யாருமின்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலனில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள்

எனத் தெரிவித்துள்ளனர்.