bhutan
இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் 2008ம் ஆண்டு மன்னராட்சி முறை முடிந்து அரசாட்சிமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அரசருக்குச் சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்துள்ளது .
அந்தக் குழந்தையை வரவேற்கும் விதமாகப் புத்தமதச் சடங்கின்படி நாடு முழுவதும் 1,08,000 மரக்கன்றுகள் நடப்பட்டு “மரக்கன்றைப் போலவே இளவரசரும் ஆரோக்கியம் , பலம், விவேகம் மற்றும் இரக்கம் உடையவராக வளர வேண்டும் “எனப் பிரார்த்தனை மேற்கொள்ளப் பட்டது .
அந்நாட்டின் 82,000 இல்லம்தோறும் மரக்கன்றுகளும் , மீதமுள்ள 26,000 மரக் கன்றுகளைத் தன்னார்வலர்கள் 14 மாவட்டங்களில் நட்டுக் கொண்டாடினர் .
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த டென்சின் லெக்பெல் கூறுகையில் “புத்த மத நம்பிக்கையின் படி 108 என்பது ராசியான எண் . அது ஞானத்தை தடுக்கும் 108 இடர்பாடுகளை அழிப்பதை குறிப்பதாகவும் படுகின்றது . அதனால்தான் ஜெபமாலையில் 108 உள்ள மணிகள் உள்ளது. எனவே 108ன் பெருக்குத் தொகையாக 108000 மரக் கன்றுகள் நடப் பட்டன” என்றார்.
புத்த மத நம்பிக்கையின் படி மரம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் தேவையான வளத்தை வாரி வழங்குவது ஆகும் . மரம் என்பது அன்பு , அரவணைப்பு , நீண்ட ஆயுள் மற்றும் இரக்கத்தின் அடையாளம் எனவே தான் மரம் நட்டு பூட்டான் இளவரசரின் வருகையைக் கொண்டாடினர்.
மேலும் பூட்டான் அரசு இயற்கையுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் நலனையும் முன்னிறுத்தி ” மொத்த தேசிய மகிழ்ச்சி” எனும் தனித்தன்மை வாய்ந்த கொள்கையைப் பின்பற்றி வருகின்றது . அந்தக் கொள்கையின்படி, பூட்டான் அரசியலமைப்பு சட்டம் அந்நாட்டின் பரப்பளவில் அறுவது சதவிகிதம் காடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றது.