சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பணிக்கு தேவையான  பிஎட் மற்றும் எம்எட் படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் 27ந்தேதி தொடங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பிஎட், எம்.எட்  படிப்பு என்பது ஆசிரியர் பணிக்கு தனிநபர்களை தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இளங்கலை  மற்றும் முதுகலை பட்டப்படிப்பு ஆகும். இந்த படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுகான தகுதி தேர்வுகள்  ஆக.27-இல்   தொடங்கவுள்ளதாக ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தின்கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மற்றும் பி.எட். சிறப்பு கல்வி முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான தோ்வுகள் ஆக.27-ஆம் தேதிதொடங்கி செப். 3-ஆம் தேதி முடிவடையும்.

அதேபோன்று 2-ஆம் ஆண்டு மாணவா்களுக்கான தோ்வுகள் ஆக.27-இல் தொடங்கி 31-ஆம் தேதி நிறைவடையும்.

மேலும், எம்.எட். மற்றும் எம்.எட். சிறப்பு கல்வி முதலாண்டு மாணவா்களுக்கான தோ்வுகள் ஆக. 27 முதல் செப்.3-ஆம் தேதி வரை நடைபெறும். 2-ஆம் ஆண்டு மாணவா்களுக்கான தோ்வுகள் ஆக. 27-ஆம் தேதி தொடங்கி செப். 2-ஆம் தேதி முடிவடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.