சென்னை:  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக இன்று மாலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவியின் பதவிகாலம் ஆகஸ்டு 31ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரது பதவி நீட்டிப்பு குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாக வில்லை. இதனால், அவரே ஆளுநராக நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை ஆளுநர் ரவி அவசரமாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ரூ.100 காயம் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங், நாணயத்தை வெளியிட்டதுடன், கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கருணாநிதியும் புகழ்ந்து பேசினார். இது வியப்பை ஏற்படுத்தியது. மேலும்,  தமிழக  முதல்வர் ஸ்டாலின் மற்றும் மூத்த திமுக நிர்வாகிகள், எம்.பி.க்களிடமும் அளவளாவினார். இது பேசும்பொருளாக மாறியது. அப்போது ஆளுநர் ரவி மாற்றம் குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி செல்லவுள்ளது  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜ்நாத்திடம் ரவி பற்றி பேசினரா ஸ்டாலின் ? நேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணையம் வெளியிட சென்னை வந்த ராஜ்நாத் சிங்கிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே அவரை டெல்லி வரச் சொல்லி உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது