சென்னை:  தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளர் யார்?  என்ற கேள்வி தமிழ்நாட்டில் விவாதப்பொருளாக மாறி வருகிறது.

தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த  நிலையில், தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   “தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகனின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. தலைமை செயலர் சிவ்தாஸ் மீனாபுதிய தலைமுறை ஆணையத்தின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய, தேர்வுக்குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்த நிலையில், பல்வேறுகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில்,  தலைமை செயலாளர்  ஷிவ்தாஸ்மீனா மீது கட்சியினரும், அமைச்சர்களும் பல்வேறு புகார்கள் கூறியதாக கூறப்படுகிறது. அவர் யாருக்கும் வளைந்து கொடுக்க மறுப்பதாகவும் கூறப்பட்டது. மேலும், பணியில் திறமையாக செயல்படாத பல ஐஏஎஸ், ஐபிஎஸ்களை உடனே இடமாற்றம் செய்துவிடுவார்.  மேலும் தன்னிச்சையாக அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவதும், அமைச்சர்கள் இல்லாமல் தானே பல பகுதிகளுக்கு நேரடி ஆய்வு மேற்கொள்வதையும் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதனால், அவர்மீது உயர் அதிகாரிகளும் மூத்த அமைச்சர்களும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.  அதனால்தான் ஷிவ்தாஸ் மீனாவை தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்  செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

சமீப நாட்களாக உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில்,  மாநிலம் முழுவதும் ஆட்சியாளர்களுக்கு சாதமான வகையில் ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட ஏராளமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், முதல்வர் குடும்பத்துக்கு விசுவாசமான  முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முருகானந்தம் சென்னையை சேர்ந்தவர். இவர் சிறப்பாக செயல்படுவதாக சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் கூட பாராட்டி இருந்தார்.  இதன் காரணமாகவே இவர்,  உதயச்சந்திரன் இருந்த இடத்தில் அமரவ வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரை தலைமைச்செயலாளராக்கி அழகு பார்க்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையைச் சோ்ந்தவரும், பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான முருகானந்தம், 1991-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணித் தேர்வில் தோ்ச்சி பெற்றார். பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை இவர் படித்துள்ளார். கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராகவும், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலா், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையா், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலாளா் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அதோடு பிடிஆர் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் இவர் செயலாளராக இருந்தார். கிட்டத்தட்ட இவர்தான் பிடிஆரின் ரைட் ஹேண்ட். பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் இவரின் பங்கு முக்கியமாக கருதப்பட்டது. உதயநிதி: பிடிஆரே இவரை அழைத்து பாராட்டும் அளவிற்கு இவரின் பணி சிறப்பாக இருந்தது.

தற்போது முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர் ஆக உள்ளார். விரைவில் தலைமை செயலாளர் ஆக வாய்ப்பு உள்ளது.