மயிலாடுதுறை: மகனின் செல்போனை பறித்த காவல் ஆய்வாளரை, அந்த பையின் தந்தை, காவல்நிலையத்தில் புகுந்து காவல் ஆய்வாளரரை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் அரங்கேறி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்  பகுதியில் உள்ள சாலையோர கடைவீதியில்  போக்குவரத்திற்கு இடையூராக நின்றதாக கூறி கல்லூரி மாணவரின் செல்போனை   அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த   காவல் ஆய்வாளர் பிடுக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவனின் தந்தை  நிலையம் சென்று காவல் ஆய்வாளரை கடுமையாக தாக்கினார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜோதிராமன். இவர் குத்தாலம் கடைவீதியில் காவல் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் மகன் கிஷோர்  என்ற  கல்லூரி மாணவன் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றதாக கூறப்படுகிறது. மேலும்,  காவல் ஆய்வாளர் ஜோதிராமன் வாகனத்திற்கு வழி தறாமல் இடையூறு செய்துள்ளார். இதனால், அந்த மாணவனை கண்டித்த காவல் ஆய்வாளர், அவனிடம் இருந்த  செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு காவல் நிலையம் வர சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது ந்தையுடன்  குத்தாலம் காவல் நிலையத்திற்கு  வந்துள்ளார். அங்கு வந்த கிஷோரின் தந்தை கடைவீதியில் தன் மகனை அடித்து செல்போனை ஏன் பிடுங்கி வந்தீர்கள்?  என்று கேட்டு மகேஸ்வரன் குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் காவல் ஆய்வாளர் ஜோதிராமனை மகேஸ்வரன் கன்னத்தில் அறைந்தாகவும் சொல்லப்படுகிறது. இது மற்ற காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தந்தையையும், மகனையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து. சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம்  அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.