டெல்லி: மேற்கு வங்க பயிற்சி மருத்துவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை காலை முதல் 24மணி நேரம் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மம்தா ஆட்சி செய்துவரும் மேற்கு வங்க மாநிலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்காத மேற்கு வங்க பெண் முதல்வரான மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக கூறி வருகிறார். ஆனால், நீிதிமன்றம் அவரது ஆட்சியை கேவலமாக விமர்சித்துள்ளது. ஆனால், அதை கண்டுகொள்ள தமம்தா, மறைந்த ஜெயலலிதா போல அதிகார மமதையில் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடைடியில், இளம் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அகில இந்திய மருத்துவர்கள் சங்கமும் நாளை காலை முதல் 24மணி நேரம் முழு வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்து சனிக்கிழமை (ஆக.17) நாடு முழுவதும் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று அறிவித்துள்ளது. அதன்படி, நாளை , ‘ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் 18-ஆம் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும்.
இந்த வேலை நிறுத்தத்தின்போது, அத்யாவசிய மருத்துவ சேவைகள் மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவுகள் தவிர வெளி நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவு மற்றும் நிவீன மருத்துவ சேவைகள் ஏதும் செயல்படாது. திட்டமிடப்பட்ட குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகள் நடத்தப்படாது. மருத்துவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு’ என்றும், ஐஎம்ஏ தனது மருத்துவர்களின் நியாயமான காரணத்திற்காக தேசத்தின் அனுதாபத்தை கோருகிறது என தெரிவித்துள்ளது.