டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதி மன்றம்  மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிபிஐ, அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.  அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய  நிலையில்,  சி.பி.ஐ. கைது செய்ததற்கு எதிராக  அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுமீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது சிபிஐ பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, கெஜ்ரிவால் ஜாமின்  மனு  இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது.  விசாரணையைத் தொடர்ந்து, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இந்த வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.