மைலாப்பூர் இந்து ஸாஸ்வத நிதி நிறுவனத்தில் இருந்து ரூ. 525 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரான தேவநாதன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி நிறுவனம் நடத்தி பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்ததை அடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதை விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டு வரும் தேவநாதன் யாதவை திருச்சியில் இன்று போலீசார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நிதி மோசடி குறித்து அவரிடம் விசாரணை நடைபெறும் என்றும் அந்தப் பணம் யார் யாருக்கு எதற்காக வழங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.