டெல்லி: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே வெளியுறவுச் செயலராக பொறுப்பு வகித்துள்ளவார்.
வினய் மோகன் குவாத்ரா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியுறவுத் துறையில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது அமெரிக்காவின் இந்திய தூதராக பொறுப்பேற்று உள்ளார். இதுவரை அதாவது கடந்த 2020 முதல் 2024 வரை அமெரிக்காவில் இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரியாகப் பணியாற்றிய தரன்ஜித் சிங் சந்து ஓய்வுபெற்ற நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட வினய் மோகன் குவாத்ரா திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12, 2024) இந்தியத் தூதராகப் பொறுப்பேற்றார்.
61 வயதான வினய் மோகன் குவாத்ரா முன்னதாக வெளியுறவுச் செயலராக பொறுப்பு வகித்தவராவார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்பது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா – அமெரிக்கா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்த அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முனைப்புடன் பணியாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.