இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் தோர்ப் ஆகஸ்ட் 4ம் தேதி மரணமடைந்தார்.
மனச்சோர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோனதாக அவரது மனைவி அமாண்டா தற்போது தெரிவித்துள்ளார்.
கிரஹாம் தோர்ப் நண்பரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான மைக்கேல் ஆர்தர்டன் அண்மையில் அமாண்டாவைச் சந்தித்தபோது இதை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
1993 முதல் 2005 வரை இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற தோர்ப் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த கிரஹாம் தோர்ப் 2022 மார்ச் மாதம் முதல் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
பெரும் மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்ட தோர்ப் 2022 மே மாதம் தற்கொலை முயற்சி மேற்கொண்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த கிரஹாம் தோர்ப் எந்த ஒரு சிகிச்சைக்கும் பலனிக்காமல் இறந்து போனதாகத் அமாண்டா தெரிவித்துள்ளார்.
கிரஹாம் தோர்ப் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக அவரது மனைவி கூறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.