டெல்லி:  நடப்பாண்டு நடைபெற உள்ள  யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த  உச்ச நீதி மன்றம்  தேர்வை ரத்து செய்ய முடியாது என கூறி யுள்ளது.

முதலில்  ஜூன் 18 அன்று நடத்தப்பட்ட UGC NET 2024 தேர்வை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தேர்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது, மேலும் இந்த கட்டத்தில் ஏதேனும் குறுக்கீடு செய்தால் குழப்பம் ஏற்படலாம் என்று கூறி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் பணி மற்றும் ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோஷிப் பெறுவதற்காக ஆண்டுதோறும் யுஜிசி நெட் தேர்வு (UGC NET Exam) என்பது மத்திய கல்வி அமைச்சகம் மேற்பார்வையில் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நெட் தேர்வில் தார்ச்சி பெற்றாமல் மட்டுமே,  துணை பேராசிரியர் பணியை பெற முடியும்.  மேலும்,  ஜுனியர் ரிசர்ஜ் பெல்லோ ஷிப் மூலமாக மாத நிதி உதவி பெற்று முனைவர் பட்டம் பெறலாம்.

இதன் காரணமாக, ஏராளமானோர் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.  ஆராய்ச்சி படிப்பு பயில்வோர் மற்றும் துணை பேராசிரியர் பணியை விரும்புவோர் இந்த தேர்வை அதிகம் எழுதி தேர்ச்சி பெற்று அரசு பணிகளை பெறுகின்றனர்.

இந்த நிலையில் நடப்பாண்டு, இளநிலை நிட் தேர்வு குளறுபடிகளைத் தொடர்ந்து யுஜசி நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டது.  பின்னர், இநத் தேர்வு வரும் 21ந்தேதி நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நப்பாண்டு நடைபெற உள்ள  யுஜிசி நெட் வினாத்தாள் கசிவாகி உள்ளதால்,  தேர்வை ரத்து ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை தலைமைநீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீபதிகள், இந்த தேர்வை நாடு முழுவதும் 9 லடச்ம் பேர் எழுத உள்ளனார். அதனால் சிலருக்காக தேர்வை எப்படி ஒத்தி வைக்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன், இதில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறியதுடன் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறியது.