டெல்லி

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள் ஹிண்டன்பர்க். ஆய்வு நிறுவனம், உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த நிருவனத்தின் அறிக்கைகள் மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.

அதானி குழுமம் பல ஆண்டுகளாக போலி நிறுவனம் மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டது. இதனால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் இழப்பைச் சந்தித்தன

நேற்று முன் தினம் இந்தியாவில் மிகப்பெரிய விஷயம் வரப்போவதாக, ஹிண்டன்பர்க் நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில்,  அதானி குழும ஊழல் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலில் ஊழல் புகாரில் தொடர்புடைய அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதவியும், அவரது கணவர் தவால் புச்சும் பங்குகள் வைத்திருந்ததாக தெரிவித்தது.

தற்போது இந்த அறிக்கை தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதானி குழுமம்

“ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை. உள்நோக்கம் கொண்டவை. அடிப்படை ஆதாரமற்றவை. அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறோம். எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படை தன்மை கொண்டவை”

எனத் தெரிவித்துள்ளது.