பாரிஸ்

டந்த 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த 33 ஆம் ஒலிம்பிக் போட்டிகள் நேற்றிரவு முடிவடந்தன.

கடந்த 26-ஆம் தேதி பீரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் தொடங்கிய 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்று, நேற்று) இரவு நிறைவடைந்தது.  33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டில், அமெரிக்கா 126 பதங்களுடன் பதக்கப்பட்டியிலில் முதலிடத்தை பிடித்தது. சீனா, ஜப்பான் நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

இம்முறை ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. பதக்கப் பட்டியலில் மொத்தம் 90 நாடுகள் இடம் பிடித்தன. இவற்றில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும், போட்டியை நடத்திய பிரான்ஸ் 5-ஆம் இடத்தையும், இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஆா்ஜென்டீனா, எகிப்து, துனீசியா தலா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்றுள்ளன.