பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஈபிள் டவர் முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்தப் போட்டியுடன் ஹாக்கி விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்த நிலையில் ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவடைந்த நிலையில் இந்தியா சார்பில் மனு பாக்கருடன் ஸ்ரீஜேஷும் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
https://x.com/16sreejesh/status/1822558768661422465
இந்த நிலையில், பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் டவர் முன் பதக்கத்துடன் பாரம்பரியமான வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ‘ஏடோ மோனே’ என்ற தலைப்புடன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.