கோவையில் இருந்து அபுதாபிக்கு தனது முதல் விமானத்தை இயக்கியது இண்டிகோ நிறுவனம்.

பீளமேட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் இயக்கப்பட்டது.

தொழில் நகரமான கோவையை உலக நாடுகளுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்கனவே விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிதாக ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபிக்கு கோவையில் இருந்து நேரடி விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

இதை இண்டிகோ விமான நிறுவனம் இயக்குகிறது. வாரத்திற்கு 3 நாட்கள் விமான சேவை வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அபுதாபி சென்ற முதல் விமானத்தை இயக்கிய விமானி விவேக் கந்தசாமி பயணிகளை வரவேற்று உரையாற்றினார்.

https://x.com/tweetKishorec/status/1822257354085175464

விமானி விவேக் கந்தசாமி மற்றும் துணை விமானி வினோத் குமார் சந்திரன் ஆகியோர் கோவையைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக அப்போது தெரிவித்ததோடு தமிழில் பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.