வாஷிங்டன் : வங்கதேசத்தில் இந்துக்கள் மீது  இஸ்லபாமியர்கள் கொடூர தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு  ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இன அடிப்படையில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது என ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் மாணவர்கள் வன்முறை போராட்டத்தால், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அதன் பிறகும்,  இந்துக்கள் வீடுகள் மீதான தாக்குதல் தொடர்கிறது. கடந்த வாரம் 20 ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 40 பேர் லேசான காயமடைந்துள்ளனர். ஹிந்துக்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் சில ஹிந்து கவுன்சிலர்களும் கொல்லப்பட்டனர்.

வங்காளதேசத்தில் உள்ள உரிமைக் குழுக்கள் மற்றும் இராஜதந்திரிகள் செவ்வாயன்று இந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் குறித்து கவலைகளை எழுப்பினர், வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு. ஹிந்துக்களுக்குச் சொந்தமான சில வணிகங்கள் மற்றும் வீடுகள் – முஸ்லீம் பெரும்பான்மை தேசத்தில் சிலர் வெளியேற்றப்பட்ட தலைவர் ஷேக் ஹசீனாவுடன் நெருக்கமாக இருந்ததாகக் கருதும் குழு – திங்களன்று தாக்கப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியே குட்டரசின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ளதாவது, வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆனாலும் வங்கதேசத்தில் சிறுபான்மை ஹிந்து சமூகத்தினருக்கு எதிராகவும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் இன வெறி தாக்குதல் நடந்துள்ளது கண்டனத்திற்குரியது.

ஹிந்துக்கள் மீது மட்டுமல்ல பல இந்து கோவில்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய இரண்டு இந்துத் தலைவர்கள் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர், வன்முறையை தூண்டுதல், இன அடிப்படையில் தாக்குதல் நடத்துதல், ஆகியவற்றை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

முகமது யூனுஷ் தலைமையிலான புதிதாக பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசுக்கு ஐ.நா.பொதுச்செயலர் வாழ்த்தினாரா என செய்தியாளர்கள் கேட்டதற்கு இல்லை.. பதவியேற்பு விழாவில் ஐ.நா. அதிகாரி கலந்து கொண்டார் என கூறினார்.