நெல்லை: அரசு பள்ளி ஆசிரியரை தீர்த்துக்கட்ட சதி செய்த 3 மாணவர்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரங்கேறி உள்ளது. இந்த நாங்குநேரி தொகுதி சபாநாயகர் அப்பாவுவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியரை மாணவன் ஒருவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது நாங்குனேரி அரசு பள்ளியில் ஆசிரியரை கொலை செய்ய மாணவர்கள் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களில் பெரும்பாலா னோர் போதை பொருட்களுக்கு அடிமையாக உள்ள நிலையில், தற்போது கொலைக்காரர்களாக மாறி வரும் நிலையும் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இருந்தாலும் சில மாணவர்கள் ஒழுங்காகக வகப்புக்கு வராத நிலையில், சிலர் சரிவர படிக்காமலும், ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால், பள்ளி ஆசிரியர்கள், அந்த மாணவர்களை கண்டித்துதுடன் உங்களது பெற்றோர்களிடம் கூறிவிடுவோம் என்றும், ஆண்டு இறுதி தேர்வு எழுத முடியாது என்றும் எச்சரித்துள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த குறிப்பிட்ட 3 மாணவர்கள், தங்களை அனைவரும் முன்பும் அசிங்கமாக திட்டிய ஆசிரியரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் தங்களது புத்தக பைகளில் கத்தி அரிவாள் போன்றவற்றை எடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து சில மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரகசியமாக தெரிவித்துள்ளனர். இதனால், அலட்ரான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், மாணவர்கள் வகுப்பறையைவிட்டு வெளியேறா விடாமல் செய்து, அவர்களின் பைகளை சோதனை இட்டனர். அப்போது குறிப்பிட்ட மாணவர்களின் புத்தகப்பையில் கத்தி மற்றும் கத்தரிக்கோல், சிறிய அரிவாள் போன்றவை இருந்தை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த 3 மாணவர்களையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அந்த 3 மாணவர்களையும் கைது அவர்களை நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர்.
மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களை மட்டமாக பேசிய ஆசிரியர்களை பழி வாங்கும் நோக்கோடு தீர்த்து கட்டுவதற்காக திட்டமிட்டு கத்தியை கொண்டு வந்ததாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நாங்குநேரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலையில், தற்போது மாணவர்கள் ஆசியர்களை கொலை செய்ய முயற்சித்து வரும் சம்பவங்களும் அதிக்ரித்து வருகிற்து. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது தனியார் பள்ளியிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஓராண்டில் வள்ளியூரில் மட்டும் மூன்றாவது சம்பவமாக பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதே போல கடந்த ஜூலை தொடங்கி தற்போது வரை 3-வது சம்பவமாக மாணவர்களுக்கிடையே மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வகுப்பறையில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்! எங்கே செல்கிறது இளைய தலைமுறை..?
மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஜாபர் சாதிக்! அதிர்ச்சி தகவல்கள்…
எங்கே போகிறது தமிழகம்? 17 வயது சிறுமி கர்ப்பம் – 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
5லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது..! இது தமிழ்நாட்டின் அவலம்…