ஆகஸ்ட் 11ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் NEET PG 2024 தேர்வு நடைபெற உள்ளது தேர்வுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்ததாக சமூக வலைதளத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

100க்கும் அதிகமான டெலிக்ராம் பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலில் ரூ. 70,000 கொடுத்தால் கேள்வித்தாள் கிடைக்கும் என்று பகிரப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜூன் 23ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மாணவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.

பலநூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே சென்ற மாணவர்கள் தேர்வுக்கு 10 மணி நேரம் முன்னதாக வெளியான இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்தனர்.

https://x.com/DrDhruvchauhan/status/1821034732626571590

ஆகஸ்ட் 11ம் தேதிக்கான தேர்வு மைய நகரம் தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது, எந்த தேர்வு மையம் என்ற விவரம் நாளை வெளியாக உள்ள நிலையில் தேர்வுத் தாள் கசிந்ததாக சமூக வலைதளத்தில் பரவிவரும் தகவல் மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை நீட் மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்… மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி…