ட்டி

கஸ்ட் 15 வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயங்கும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சுற்றுலாப்பயணிகளுக்காக நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.  இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிப்பாக கல்லார் – ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்து ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவதில் ரெயில்வே ஊழியர்கள் சிரமத்தை சந்தித்தனர்.

இந்த மண்சரிவ அகற்ற காலதாமதம் ஏற்பட்டதால் மலை ரயில் சேவை வரும் 6 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

தற்போது மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரெயில் சேவை மேலும் சில தினங்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இன்னும் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகள் முடியாததால் வரும் 15 ஆம் தேதி வரை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.