வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பினார்.
இருந்தபோதும், அங்கு வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது.
300க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெற்ற வன்முறையில் மேலும் பலர் இறந்துள்ளனர்.
அவாமி லீக் கட்சியின் ஷாஹின் சக்லதாருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததை அடுத்து அங்கு தங்கியிருந்த 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தவிர 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.