பாரிஸ்

பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் மகளிர் மல் யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இத்தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

இன்று இந்த தொடரில் மகளிர் மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் வினேஷ் போகத், உக்ரைனின் ஒக்ஸானா லிவாச் உடன் மோதினார்.

இந்த போட்டியில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியாக வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிக்கணக்கில் ஒக்ஸானா லிவாச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதையொட்டி  இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் உடன் மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்,